Wood-apple (விளாம்பழம்) பயன்கள்-மருத்துவ குணநலன்கள்
(Wood-Apple) வுட் ஆப்பிள் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விளாம்பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. விளாம்பழங்களில் ஈரப்பதமும், புரத சத்து, கொழுப்பு சத்தும் உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை அதிக அளவு உண்ணலாம். பார்வைக்கு சாதாரணமாக இருக்கிற விளாம் பழம், ஒரு அழகுக் கலை நிபுணருக்கு இணையானது.
மருத்துவ குணங்கள்
- சதை நரம்புகளைச் சுருங்கச் செய்வது இதன் பொதுவான குணமாகும்.
- இதன் பழமானது கோழையை அகற்றி பசியை உண்டாக்கும் வல்லமை கொண்டது.
- இது பழ ஓடு தாதுக்களின் கொதிப்பைத் தணிக்க கூடியது.
- இது பிசின் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்ய வல்லது.
- இதன் பழமானது நாவறட்சியையும் விக்கலையும் தீர்க்க வல்லது.
- இது வாதம், பித்தம், மற்றும் குட்டம் போக்க வல்லது.
- இது ஒவ்வாமை நோய், இரத்த போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த கூடியது.
- விளாம்பழமானது பெண்களுக்கு ஏற்படும் மார்பகம், கர்ப்பபை புற்றுநோயை வராமல் தடுக்கக் கூடியது.
- விளாம்பழம் இதயத்திற்கு சக்தியை அளிக்கிறது.
- வயிறு மற்றும் குடலுக்குச் சக்தி அளிக்கிறது.விளாம்பழம் பித்த குணமுள்ளவர்களுக்கும் பித்தத்தால் உண்டாகும் நோய்களுக்கும் பயன்தரக் கூடியது.
- வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்துகிறது.
- வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது.
- இதன் பழத்தை கசாயமாக்கி வாய் கொப்பளித்தால் தொண்டையில் உண்டாகும் புண் மற்றும் கொப்பளங்களை குணமாக்கும்.
- தொண்டை வலியைப் போக்கவும் பல்லீறுகளுக்கு உறுதியளிக்கவும் இதைக் குடிப்பார்கள்.
- விளாம்மரப்பட்டையை அரைத்து படை வெண்குஷ்டம் ஆகியவற்றின் மீது பூசுவார்கள்.
- பித்தக் கொதிப்பைத் தணிக்க இதன் இலைச்சாறுடன் சிறிது வெண் சீரகம் மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பார்கள்.
- விளாம்பழத்தில் நிறைந்த அளவில் சிட்ரிக் அமிலமும் சிறு அளவில் பொட்டாஷியம், கால்ஷியம் மற்றும் இரும்பு போன்ற சில மணிச்சத்துக்களும் காணப்படுகின்றன.
- விளாம்பழத்தில் அமிலத்தன்மையும் பழுக்காத விளாங்காயில் துவர்ப்புத் தன்மையும் இருக்கிறது.
விளாம்பழத்தின் அழகு குறிப்புகள்
முகம் பொலிவு பெற:
- இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். இதை முகத்தில் மாஸக் போல போடுங்கள். விளாம்பழ விழுது எவ்வளவு நேரமானலும் உலராது என்பதால், சிறிது நேரத்தில் நீங்களாகவே கழுவி விடுங்கள்.
- இந்த சிகிச்சையை தினமும் காலையில் செய்து வந்தால் இழந்த பொலிவு மீள்வதுடன் உங்கள் முகம் இன்னும் இளமையாக மாறும்.
பருதொல்லை நீங்க:
- பயத்தம்பருப்பு 2 டீஸ்பூன், விளாங்காய் விழுது 2 டீஸ்பூன் பாதாம்பருப்பு 2 இவை அனைத்தையும் முந்தைய நாள் இரவே ஊறவைத்து மறுநாள் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- இந்த கிரீம்-ஐ முகத்தில் பூசினால் நாள்பட்ட பருக்கள் கூட மாயமாக மறைந்துவிடும்.தழும்பும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இந்த கலவையில் உள்ள விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படும்.
Wood Apple Benefits In Tamil,Wood Apple Benefits In Pregnancy,Wood Apple Benefits For Skin, How To Eat Wood Apple,Wood Apple Juice,Wood Apple Recipe