Lemon (எலுமிச்சை) பயன்கள்-மருத்துவ குணநலன்கள்
எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள்நிறப் பழம் ஆகும். இந்தப் பழம் அதன் சாறூக்காகவே பயன் படுத்தப்படுகின்றது. இந்தச்சாற்றில் 5 விழுக்காடு அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை தருகின்றது. இது சமையலில் உணவுகளுக்கு சுவை சேர்ப்பதற்காக பயன்படுகிறது.
எலுமிச்சை ஜூஸ்:
- எப்போதும் எலுமிச்சை ஜூஸை தான் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
- அத்தகைய எலுமிச்சை ஜூஸை குடித்தால் அதில் உள்ள வைட்டமின் பி மற்றும் சி (vitamin B, C) சத்து அதிகம் உள்ளது.
- உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள எலுமிச்சை ஜூஸ் முக்கியபங்கு வகிக்கிறது.
- மேலும் இது செரிமானத்தை அதிகரிக்கும்.
எலுமிச்சைப் பழம் பயன்கள்:
- எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் கலந்து விருப்பத்திற்கேற்ப சீனி அல்லது சர்க்கரை அல்லது உப்புடன் சேர்த்து பருகுவது உண்டு.
- இது சமையலில், உணவுகளுக்கு சுவை சேர்ப்பதற்கு பயன்படுகின்றது.
- இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படையாகக் கொண்டு பலவகையான பானங்களும், இனிப்பு வகைகளும் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
- பலவகை நச்சுப் பொருட்களுக்கான நஞ்சு முறிப்பு மருந்தாகப் பயன்படுகின்றது.
Lemon Juice Benefits,Lemon Benefits For Women’s,Lemon Benefits For Skin,Lemon Benefits And Side Effects,Benefits Of Lemon On Face,Dried Lemon Benefits,Benefits Of Lemon Water In The Morning,Disadvantages Of Drinking Lemon Water Daily