Common fig (அத்திப்பழம்) பயன்கள்-மருத்துவ குணநலன்கள்
அத்திப் பழம் ஒரு மரவகையைச் சார்ந்த பழம் ஆகும். இது பொடிப்பொடியாக கொத்துக் கொத்தாகத் தோன்றும். பழம் நன்கு பழுத்தவுடன் தானாக கீழே விழுந்து விடும். இது வெளியே பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். பழத்தை உரித்துப் பார்த்தால் பூச்சிகளும் புழுக்களும் உட்புறத்தில் இருக்கும். எனவே, அத்திப் பழத்தை பதப்படுத்திய பின்பு உண்பதுதான் சிறந்தது.
மருத்துவ குணங்கள்:
- உணவை விரைவில் ஜீரணிக்க செய்ய வல்லது.
- சுறு சுறுப்பை தரும்.
- கடும் பித்தத்தை வியர்வைமூலம் வெளியேற்றும்.
- ஈரல் மற்றும் நுரையீரலிலுள்ள தடுப்புகளை நீக்கும்.
- கால்களில் உண்டாகும் ஒரு வகை நோயை வரவிடாமல் தடுக்கின்றது.
- வெட்டையின ஆ ணிவேர் அற்றுப் போகின்றது.
- வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
- தலைமுடி நீளமாக வளர உதவுகிறது.
- மலச்சிக்கல் நீங்க சிறிது அத்தி விதைகளை உண்டால் போதும்.
- நாள்பட்ட மலச்சிக்கல் நீங்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
- கல்லீரல் வீக்கத்தை குணமாக்கும்.
- கவர்ச்சிகரமான உடலை பெறஉதவுகின்றது.
- போதைப்பழக்கத்தால் ஏற்படும் தொல்லைகளில் விடுபட மிகவும் உதவுகிறது.