பிரயாணம் – மனைவியின் அனுமதிபெற்று பிரயாணம் செய்ய வேண்டும்
மகாவிஷ்ணுவை தியானம் செய்துவிட்டு, தன்னுடைய மனைவியின் அனுமதிபெற்று, வேதமறிந்தோர், குலதெய்வம், பெரியோர்கள், குரு முதலானவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று பிரயாணம் செய்ய வேண்டும்.
புறப்படும் நேரத்தில், இடது நாசியில் சுவாசம் எளிதாக இருந்தால் இடது காலையும், வலது நாசியில் சுவாசம் எளிதாக இருந்தால், வலது காலையும் முதலில் வைத்துப் புறப்பட வேண்டும்.
யாத்திரை புறப்படும் போது, இடது மூக்கிலும், வீட்டிற்குள் நுழையும் போது வலது மூக்கிலும், சுவாசம் எளிதாக இருப்பது உத்தமம். மனைவி கர்பமாக இருக்கும் போது புருஷன் 6வது 8வது மாதத்தில் பிரயாணம் செய்யக்கூடாது.