நட்சத்திரகள் 27 – Astrology Stars
9 நவக்கிரகங்களும் இந்த நட்சத்திர வாரியாக 12ராசிகளுக்கும் பயணம் செய்வார்கள். சூரியன், சந்திரன் செவ்வாய் , புதன், குரு. சுக்கிரன், சனி முதலிய 7 கிரகங்களும்ராசிச் சக்கரத்தில் இடமிருந்து வலமாகவும், சாயாக்கிரகங்களான
ராகு, கேது, இந்த 2 கிரகங்களும், வலமிருந்து இடமாகவும் செல்வார்கள். ராகுவுக்கு 7வது வீட்டில் சரியாக 180 பாகை தூரத்தில் கேது எப்போதுமே இருப்பார்
சூரியன் ஒரு ராசியை ஒரு மாதத்தில் கடப்பார்.
சந்திரன் ஒரு ராசியை 2 ¼ நாளில் கடப்பார்.
செவ்வாய் ஒரு ராசியை 1 ½ மாதத்தில் கடப்பார்
புதன் ஒரு ராசியை 1 மாதத்தில் கடப்பார்
குரு ஒரு ராசியை 1 வருடத்தில் கடப்பார்
சுக்கிரன் ஒரு ராசியை 1 மாதத்தில் கடப்பார்
சனி ஒரு ராசியை 2 ½ வருடத்தில் கடப்பார்
ராகு, கேது இருவரும் ஒரு ராசியை 1 ½ வருடத்தில் கடப்பார்கள்
சூரியன் சித்திரை 1வது நாளன்று,கால புருஷனின் முதல் ராசியான மேஷ ராசியில் பிரவேசிப்பார். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியாகக் கடந்து, பங்குனி முதல் தேதியன்று மீனத்தில் பிரவேசிப்பார். இப்படியே ஒரு வருடத்திற்குள் 12 ராசிகளையும் கடந்து செல்வார் ராகு, கேது ஆகிய இரண்டு கிரயங்களுக்கும் உருவம் கிடையாது. அவை இரண்டும் நிழற் கிரகங்கள்.
ஞாயிற்றுக் கிழமை – சூரியனுக்கும்
திங்கட் கிழமை – சந்திரனுக்கும்
செவ்வாய் கிழமை – செவ்வாய்க்கும்
புதன் கிழமை – புதனுக்கும்
வியாழக் கிழமை – வியாழனுக்கும்
வெள்ளிக்கிழமை – சுக்கிரனுக்கும்
சனிக்கிழமை – சனிக்கும் உரியது