திதிகள் என்றால் என்ன ? அதன் விளக்கம்?
அமாவாசை, பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தி, பௌர்ணமி என்று திதிக்கள் உள்ளன.
பிரதமை, சஷ்டி, ஏகாதசி இவற்றில் கோயில் விழா எடுத்தல், நடனம், பாட்டு உத்தமம்.
துவிதியை, சப்தமி, துவாதசி, இவற்றில் வாகனம் வாங்க விற்க, பிராயணம் செய்ய உத்தமம்.
திரிதியை, அஷ்டமி, திரியோதசி இவற்றில் கொடி மரம் நடுவது நல்லது. திரிதியை திரியோத சி திதியில் சுபகாரியம் செய்யலாம். சதுர்த்தி, நவமி சதுர்த்தி இவற்றில் குரூரமான செயல்களுக்கு சிறந்தது. பஞ்சமி தசமி, பௌளர்ணமி இவற்றில் திருமணம், யாத்திரை, யாகம் மற்றும் சுபகாரியங்கள் செய்யலாம்.