செம்பருத்திப்பூ புளிக்காய்ச்சல் – மூலிகை சமையல்
தேவையான பொருட்கள்
ஒற்றை இதழ் செம்பருக்கிப் பூக்கள் – 50
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2 (அ) 3
புளி – 1 எலுமிசீசை அளவு
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவ
Kadugu – ¼ தேக்கரண்டி
உப்பு – ருசிக்கு தேவையானது
செய்முறை
புளியை கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். செம்பருத்திப் பூக்களில் இருக்கும் மகரந்தப் பொடியை எடுத்துட்டு, அதைப் பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பருப்புகள் சிவந்ததும் வெங்காயத்தையும், இரண்டாக கீறிய பச்சை மிளகாயையும் போட்டு கிளறவும். அதோடு நறுக்கின செம்பருத்திப் பூக்களையும் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து வந்ததும், வத்தியதும் இறக்கி வைக்கவும். வாசனையுடன் இருக்கும் இந்த புளிக்காய்ச்சலை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.