சூலம்
வார சூலம், திதி சூலம், நட்சத்திர சூலம் உள்ள திசைகளில் பிரயாணம் செய்யக்கூடாது. அவசியம் போக வேண்டுமாயின் வார சூலங்களில் நாழிகை 10க்கு மேல் பிரயாணம் செய்யலாம்.
வார சூலம் – கிழமை | சூலம் – பரிகாரம் |
திங்கள், சனி | கிழக்கு – தயிர் |
செவ்வாய், புதன் | வடக்கு – paal |
வியாழன் | தெற்கு – தைலம் |
வள்ளி, ஞாயிறு | மேற்கு – வெல்லம் |
இந்த கிழமைகளில், மேற்சொன்ன திசைகளில் பிரயாணம் செய்யக் கூடாது. அவசியம் நேரிட்டால் – பரிகாரம் சொன்ன படி அந்தப் பொருளை உட்கொண்டு பின்பு செல்லலாம்.
திதி சூலம்
பிரதமை, நவமி | கிழக்கு |
துவிதியை, தசமி | வடக்கு |
திருதியை, ஏகாதசி | தென் கிழக்கு |
சதுர்த்தி, துவாதசி | தென் மேற்கு |
பஞ்சமி, திரயோதசி | தெற்கு |
சஷ்டி, சதுர்த்தசி | மேற்கு |
சப்தமி, பௌளர்ணமி | வட மேற்கு |
அஷ்டமி, அமாவாசை | வடகிழக்கு |
இந்த சூலங்களில் யாத்திரை செய்யக் கூடாது.
நட்சத்திர சூலம்
கேட்டை, திருவோணம் – கிழக்கு
மகம், அசுவினி – தெற்கு
ரோகிணி, பூசம் – மேற்கு
அஸ்தம், உத்தரம் – வடக்கு
கேட்டை – தென்கிழக்கு
பூரட்டாதி – தென்மேற்கு
ரோகிணி – வடமேற்கு
உத்தரம் – வடகிழக்கு
இந்த சூலங்கள் உள்ள திசைகளில் யாத்திரை ஆகாது.