சிவப்பு செம்பருத்தி கறி – மூலிகை சமையல்
தேவையான பொருட்கள்
சிவப்பு செம்பருத்திப் பூக்கள் – 10
சிறிய அல்லது பெரிய வெங்காயம் – தேவைக்கு (இதழ்களின் அளவு)
கரம் மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 1
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்துமல்லி – சிறிதளவு
கடுகு, உளுத்தம் பருப்பு – தேவைக்கு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
மகரந்தம், காம்பு நீக்கி இதழ்களைச் சுத்தம் செய்த பூவினை நறுக்கிக் கொள்ளவும். தாளிப்பில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் பிறகு செம்பருத்தி இதழ்களைச் சேர்க்கவும். உப்பு, பெருங்காயம், கரம் மசாலா, கறிவேப்பிலை, மல்லித் தழைகளையும் போட்டு வதக்கவும்.