அரோகரா அரோகரா என்று சொல்லுங்கள்
ஆறுமுகன் பேரழகை பாடிச் செல்லுங்கள்
காவடிக்குள் ஆடிவரும் கந்தனையே பாருங்கள்
கவலையெல்லாம் தீர்ந்திடவே கந்தன்னாம்மம் சொல்லுங்கள்
சேவடியே சரணமென சேர்ந்து சொல்லுங்கள்
சிக்கலெல்லாம் தீர்ந்துவிடும் நின்று பாருங்கள்
காலையிலும் மாலையிலும் கந்தன் புகழ் பாடுங்கள்
வேலையோடு வேலவனை தொழுது வாருங்கள்
சோலைமலை வேலவனைச் சொல்லிசொல்லிப் பாடுங்கள்
சொர்க்க வாழ்வு கிடைத்திடவே சுப்ரமணியை நாடுங்கள்
பாலிலே குளிக்கின்ற பரம்பொருளைப் பாருங்கள்
பாலரின் காவடிக்கு பாட்டுப் பாட வாருங்கள்
சிங்கைநகர் அழகுதனை வியந்து பாருங்கள்
சீனரின் காவடியை கண்டு மகிழுங்கள்
பார்வதியின் பாலகனைப் பார்க்க வாருங்கள்
பாவமெல்லாம் நீங்கிடவே பகவான்னாமம் சொல்லுங்கள்
வேலைஎந்தும் அழகுதனை வேடிக்கை பாருங்கள்
வெற்றிவேலன் திருமுகத்தை வேட்கையுடன் நாடுங்கள்
சோலையிலே வல்லியினைச் சுமந்தவனைப் பாருங்கள்
பழத்துக்காக பழனி மலை சென்றவனை நாடுங்கள்
மயிலேறி சுற்றுக்கின்ற மாமணியைப் பாருங்கள்
மணக்கோலம் கொண்டவனை மாலையிட்டு வணங்குகள்
தனக்கெனவே ஓரிடத்தைப் பெற்றவனை பாருங்கள்
தங்கரதம் ஏறிவரும். பேரழகைப் பாருங்கள்
சிங்கைநகர் வேலவனின் சிரிப்பழகைப் பாருங்கள்
சிந்தனைக்கு செவிசாய்க்கும் சிங்காரனைப் போற்றுங்கள்