அமாவாசை என்ன செய்யலாம்
அமாவாசையில் தானம், பிதுர்காரியங்கள் செய்யலாம்.
அமாவாசையில் வேறு ஏதாவது சுபகாரியம் செய்வதானால் அமாவாசையை ஆறாகப்பிரித்து கடைசி 6வது பிரிவில் சுபகாரியம் செய்யலாம். ஆனால் அமாவாசையில் திருமணம் செய்யக் கூடாது.
பிரதமை, அஷ்டமி,நவமி திதியில் திருமணம் கூடாது. ஏகாதசியில் விரதமிருக்க வேண்டும்.
கரிநாட்கள்
ஒவ்வொரு மாதமும் வரும் காரிநாட்களில் சுபகாரியம் செய்யக் கூடர்து.
நாள் விழிப்பு
புதன், வியாழன், வெள்ளி 2 கண்ணுள்ள நாட்கள். ஞாயிறு திங்கள் இவை ஒரு கண்ணுள்ள நாட்களானதால் சிறப்பானதல்ல.
செவ்வாய், சனி குருட்டு நாட்களாகையால் சுபகாரியங்கள் கூடாது. புதன், வியாழன், வெள்ளி இரு கண்ணுள்ள நாட்களா கையால் எல்லாவித சுபகாரியங்களும் செய்யலாம்.